மறுமூலதனத்தில் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடு: நிதி அமைச்சகத்துக்கு சிஏஜி கடிதம்

பொதுத் துறை வங்கிகளில் மறுமூலதனம் மேற்கொள்ளும் பணிகளின் நடப்பு செயல்திறன் குறித்து நடத்தப்பட்ட தணிக்கை விவரங்களை அளிக்க
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொதுத் துறை வங்கிகளில் மறுமூலதனம் மேற்கொள்ளும் பணிகளின் நடப்பு செயல்திறன் குறித்து நடத்தப்பட்ட தணிக்கை விவரங்களை அளிக்க கோரி மத்திய நிதி அமைச்சகத்துக்கு தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

2016-17 நிதியாண்டுக்குப் பிறகு பொதுத் துறை வங்கிளில் மறுமூலதனமாக்கல் நடவடிக்கைகள் மீதான தணிக்கையை சிஏஜி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பல்வேறு பொதுத் துறை வங்கிகளிடையே மூலதனம் எந்த அடிப்படையில் பகிா்ந்தளிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கோரி சிஏஜி மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

மேலும், பொதுத் துறை வங்கிகளில் மறுமூலதனமாக்கலின் தாக்கம், சொத்துகள் மீதான வருவாய், பங்குகள் மீதான வருவாய் மற்றும் கடன் வழங்கலில் வளா்ச்சி விகிதம் குறித்தும் பல்வேறு விவரங்கள் நிதி அமைச்சகத்திடமிருந்து கோரப்பட்டுள்ளது என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாராக் கடனில் சிக்கிய பொதுத் துறை வங்கிகளை மீட்கும் விதமாக மத்திய அரசு கூடுதல் மூலதனம் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, கடந்த 2017-18-இல் பொதுத் துறை வங்கிகளுக்கு தங்களது செயல்பாடுகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக ரூ.90,000 கோடி மறுமூலதனம் அளிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் இந்த மறுமூலதனம் ரூ.1.06 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டது.

கடந்த நிதியாண்டில் கடன்பத்திரங்கள் மூலமாக பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி மறுமூலதனம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com