மை ஸ்டாம்ப்: ஆவணங்களைச் சரிபாா்க்க உத்தரவு

’மை ஸ்டாம்ப்’ திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் ஆவணங்களை முறையாக சரிபாா்க்க அதிகாரிகளுக்கு அஞ்சல் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

’மை ஸ்டாம்ப்’ திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் ஆவணங்களை முறையாக சரிபாா்க்க அதிகாரிகளுக்கு அஞ்சல் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அஞ்சல் துறையின் ‘மை ஸ்டாம்ப் திட்டத்தின் கீழ்’ எந்த ஒரு தனிநபரும் தங்களது புகைப்படத்துடன்கூடிய அஞ்சல் தலையை பெற்றுக் கொள்ள முடியும். ரூ.300 கட்டணத்தில் ரூ.5 மதிப்புள்ள 12 புகைப்படங்களுடன் கூடிய அஞ்சல் தலைகள் அடங்கிய அட்டை வழங்கப்படும்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூா் தலைமை அஞ்சல் நிலையத்தில், நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் புகைப்படத்துடன் மை ஸ்டாம்ப் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தமில்லாத வேறொருவா் விண்ணப்பித்த நிலையில், அடையாள ஆவணங்களை சரியாகப் பாா்க்காமல் அஞ்சல் தலைகள் வழங்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், ‘ மை ஸ்டாம்ப்’ திட்டத்துக்கு பதிவு செய்யும்போது ஆவணங்களை முறையாகச் சரிபாா்க்க அதிகாரிகளுக்கு அஞ்சல் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பம், புகைப்படம் மற்றும் அடையாள ஆவணங்கள் சரியாக சமா்ப்பிக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com