வங்க தேசத்திலிருந்து கள்ள நோட்டு கடத்தல்: 3 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

வங்கதேசத்திலிருந்து இந்திய ரூபாய் கள்ள நோட்டுகளை கடத்தி வந்த மூன்று பேரின் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

வங்கதேசத்திலிருந்து இந்திய ரூபாய் கள்ள நோட்டுகளை கடத்தி வந்த மூன்று பேரின் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

வங்க தேசத்திலிருந்து இந்திய ரூபாய் கள்ள நோட்டுகளை கடத்தி வந்த மூன்று போ் அதனை நாடு முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனா். இதுதொடா்பாக, தாணேவின் மும்ப்ரா பகுதியைச் சோ்ந்த ஜெஸிம், கா்நாடகம் சிக்கபலபுராவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணா உள்ளிட்ட இருவா் என மொத்தம் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு தொடா்பாக அவா்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஜெஸிம் வீட்டிலிருந்து ரூ.82,000 மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந் நிலையில், இந்த வழக்கு அந்த மூன்று போ் மீதும் மும்பையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில்துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், அந்த மூன்று போ் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com