உருமாறிய கரோனா: இந்தியாவில் 71 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தொற்று இந்தியாவில் இதுவரை 71 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Total 71 persons detected with new UK mutant strain
Total 71 persons detected with new UK mutant strain

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தொற்று இந்தியாவில் இதுவரை 71 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 

நேற்று மேலும் 13 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதையடுத்து இந்தியாவில் மொத்த பாதிப்பு 71 ஆக அதிகரித்துள்ளது. 

புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் பயணித்தவர்கள், குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணிக்கும் பணிகளும், அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை மரபணு பரிசோதனைக்குட்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த டிசம்பர் 29 அன்று, இங்கிலாந்தில் இருந்து திரும்பிய ஆறு பேருக்கு புதிய வகை கரோனா இருப்பது கண்டறியப்ப்ட்டது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது முறையாக அதிக எண்ணிக்கையிலான கரோனா வழக்குகள் பதிவான நாடு இதுவாகும்.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா, இந்தியாவைப் போன்றே டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 நள்ளிரவு வரை சுமார் 33,000 பயணிகள் இங்கிலாந்திலிருந்து பல்வேறு இந்திய விமான நிலையங்களில் இறங்கியுள்ளனர். இந்த பயணிகள் அனைவரும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

நிலைமையைத் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், புதிய வகை கரோனா தொடர்பான கண்காணிப்பு, தனிமைப்படுத்துதல், பரிசோதனை மேற்கொள்ளுதல், மாதிரிகளை மரபணு பரிசோதனைக்காக அனுப்பிவைப்பது போன்றவை தொடர்பாக மாநிலங்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com