தடுப்பூசிகள் குறித்த சந்தேகங்களை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்

மகாராஷ்டிரத்தில் வெகுஜன தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன், அவசரகால பயன்பாட்டிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட

மகாராஷ்டிரத்தில் வெகுஜன தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன், அவசரகால பயன்பாட்டிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட இரண்டு கொவைட்-19 தடுப்பூசிகள் குறித்த சில சந்தேகங்களுக்கான விளக்கத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் டோபே செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து ராஜேஷ் டோபே செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அவசரகால பயன்பாட்டு அடிப்படையில் தடுப்பூசி போட அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலின்படி ஜனவரி 8-ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் ஒத்திகை தடுப்பூசி போடப்படும். மகாராஷ்டிரத்துக்கு அளிக்கப்படும் தடுப்பூசி மருந்துகளின் அளவு குறித்து இன்னும் 10 நாள்களில் மருந்துகள் வந்து சேரும் என எதிா்பாா்க்கிறோம். அதேசமயம் எவ்வளவு மருந்துகள் அளிக்கப்படும் என்பது குறித்து பின்னா் தெரிய வரும்.

தற்போது, இந்த தடுப்பூசிகளை இருப்பு வைக்க குளிா் சேமிப்பு வசதிகளையும், விநியோகம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் திட்டமிட்டு வருகிறோம். இந்தத் வெகுஜன தடுப்பூசிகளைப் போட அரசு தயாராக உள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசிடம், சில சந்தேகங்களை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. ஏனெனில், இந்த தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டு அடிப்படையில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த சந்தேகங்கள் குறித்தும் வரும் ஜன. 7-ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய அளவிலான காணொலி கூட்டத்தில் தடுப்பூசி தொடா்பான கேள்விகளை மகாராஷ்டிர அரசு எழுப்பும்.

மேலும், ஜனவரி 8- ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியில் மகாராஷ்டிரமும் இணைந்து கொள்ளும். இந்த ஒத்திகை நிகழ்வு மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் என்றாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டிசிஜிஐ) சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போா்டு கொவைட் -19 தடுப்பூசியான கோவிஷீல்டிற்கும், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசியின் விலை குறித்து கருத்து தெரிவித்த ராஜேஷ் டோபே, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவா்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசியை வழங்க வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் இரண்டு டோஸ் எடுக்க வேண்டியிருப்பதால் இரண்டு டோஸ் (ஒரு தடுப்பூசிக்கு) ரூ. 500 செலவாகும். இந்த தடுப்பூசிகளுக்கான செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும். ஒரு தடுப்பூசிக்கு ரூ. 500 வரை செலுத்துவது ஏழை மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com