3 ஆண்டுகளில் 460 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 460 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 460 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் நொய்டா பகுதியைச் சோ்ந்த ரஞ்சன் தோமா் என்பவா், கடந்த ஆண்டுகளில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல்கள், உயிரிழந்த பாதுகாப்புப் படையினா் தொடா்பான விவரங்களைத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்தாா். அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இடதுசாரி தீவிரவாதத் தடுப்புப் பிரிவு பதிலளித்துள்ளது.

அதில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு நவம்பா் வரை 460 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். அதே காலகட்டத்தில் இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 161 வீரா்கள் உயிரிழந்தனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் குறைந்துவிட்டதாகவும் 46 மாவட்டங்களில் மட்டுமே நக்ஸல் நடவடிக்கைகள் உள்ளதாகவும் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. நக்ஸல் தாக்குதலால் உயிரிழந்த பொது மக்கள், பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை கடந்த 2010-ஆம் ஆண்டில் 1,005-ஆக இருந்ததாகவும், அது கடந்த 2019-ஆம் ஆண்டில் 202-ஆகக் குறைந்துவிட்டதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com