காஷ்மீரில் மீண்டும் பனிப்பொழிவு: விமானச் சேவை பாதிப்பு

ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் சனிக்கிழமை மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. எனவே, விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 4-வது நாளாக விமான சேவை ரத்து
ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 4-வது நாளாக விமான சேவை ரத்து

ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் சனிக்கிழமை மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. எனவே, விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த நான்கு நாள்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, விமானச் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.  பின்னர், வியாழன் முதல் செயல்பட தொடங்கியது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மீண்டும் புதிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 

அதன்படி, ஸ்ரீநகரில் 4 அங்குல பனியும், தெற்கு காஷ்மீரின், குல்கமில் 5 அங்குல பனியும், அனந்த்நாக் 3 அங்குலமும், சோபியான் மாவட்டத்தில் 3 மற்றும் புல்வாமாவில் 4 அங்குல பனியும் பதிவாகியுள்ளது. 

வடக்கில் பந்திபோராவில் 2 அங்குல பனியும், மத்திய காஷ்மீரின் புட்காம் மற்றும் காண்டர்பால் மாவட்டங்களில் தலா 3 அங்குலங்களாகப் பனி நிலவி வருகின்றது. 

வடக்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற குல்மார்க்கின் ஸ்கை ரிசார்ட்டிலும், தெற்கில் உள்ள பஹல்காம் சுற்றுலா ரிசார்ட்டிலும் பனிப்பொழிவு இருப்பதாக எந்த தகவலும் இல்லை. 

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் புதிய பனிப்பொழிவு நிலவி வருவதால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓடுபாதையில் பனி குவிந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, விமானங்கள் புறப்படுவதில் தாமதமாகியுள்ளது. 

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து ஏழாவது நாளாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com