நாட்டில் புதிய வகை கரோனா பாதிப்பு 90-ஆக அதிகரிப்பு

நாட்டில் புதிதாக பரவி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
நாட்டில் புதிய வகை கரோனா பாதிப்பு 90-ஆக உயர்வு
நாட்டில் புதிய வகை கரோனா பாதிப்பு 90-ஆக உயர்வு

நாட்டில் புதிதாக பரவி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஜனவரி 6-ஆம் தேதி வரை புதிய வகை கரோனா பாதிப்பு 73 ஆக இருந்தது. நேற்று 9 பேருக்கு புதியவகை கரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்று (ஜன. 9) மேலும் 8 பேருக்கு புதியவகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 90-ஆக அதிகரித்துள்ளது.

புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டனிலிருந்து 246 பயணிகள் தில்லி வந்தடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com