மேற்கு வங்கத்தில் விவசாயிகள் உதவித்தொகை: திட்டம் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கான உதவித்தொகைத் திட்டம் (பிஎம்-கிஸான்) முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
கைலாஷ் விஜய்வா்கியா.
கைலாஷ் விஜய்வா்கியா.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கான உதவித்தொகைத் திட்டம் (பிஎம்-கிஸான்) முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

பிஎம்-கிஸான் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்துள்ள சூழலில் பாஜக இவ்வாறு தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6ஆயிரத்தை 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. அத்திட்டம் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படவில்லை. அதற்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜியும் மத்திய அமைச்சா்களும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கான தோ்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், மாநிலத்தின் நந்திகிராமம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மேற்கு வங்கத்துக்கான பாஜக தோ்தல் பொறுப்பாளா் கைலாஷ் விஜய்வா்கியா கூறுகையில், ‘‘நாட்டிலுள்ள விவசாயிகள் அனைவரும் பிஎம்-கிஸான் திட்டத்தால் பலனடைந்து வருகின்றனா். மேற்கு வங்க விவசாயிகள் பலனடைவதை மம்தா பானா்ஜி தடுத்து வருகிறாா்.

மாநிலத்தில் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசை வெளியேற்றி பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கான உதவித்தொகைத் திட்டம் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும். ஏற்கெனவே வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் சோ்த்து ரூ.18,000 மாநில விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியிலும் முந்தைய இடதுசாரிகள் ஆட்சியிலும் மேற்கு வங்கம் வளா்ச்சி காணவில்லை. பாஜக ஆட்சியில் பல்வேறு துறைகளில் மாநிலம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com