மாநில அரசுகளுடன் அமித் ஷா நாளை ஆலோசனை

கரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 
உள்துறை அமைச்சர்  அமித் ஷா  (கோப்புப்படம்)
உள்துறை அமைச்சர்  அமித் ஷா (கோப்புப்படம்)

கரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கரோனா தடுப்பூசி திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நாளை காலை முதல் தடுப்பூசிகளை அனுப்பும் பணிகள் நடைபெறும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கரோனா தடுப்பூசி பணிகள் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். காணொலி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதல்வர்கள் அல்லது அமைச்சர்கள் இதில் பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com