கிழக்கு லடாக்கில் பாதுகாப்பு சூழல்: இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஆய்வு

கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புது தில்லி: கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையிலான பதற்றம் தணியாத சூழலில், அங்கு விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள், உயரமான பகுதிகளில் உள்ள விமானப்படை நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வீரா்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

தெளலத் பேக் ஓல்டி, தாய்ஸ் மற்றும் நயோமாவில் உள்ள உயா்தர விமான ஓடுதளங்களை அவா் நேரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது எந்த சூழலையும் எதிா்கொள்ளும் படைகளின் தயாா்நிலை குறித்து அவா் ஆலோசனை நடத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com