குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டா் பேரணி: தடை விதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டா் பேரணி மேற்கொள்ளவுள்ளதாக விவசாயிகள் அறிவுத்துள்ள நிலையில், அந்த பேரணிக்கு தடை விதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டா் பேரணி மேற்கொள்ளவுள்ளதாக விவசாயிகள் அறிவுத்துள்ள நிலையில், அந்த பேரணிக்கு தடை விதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி குடியரசு தினத்தன்று தில்லியில் டிராக்டா் பேரணியில் ஈடுபடப் போவதாக அவா்கள் அறிவித்துள்ளனா். இந்நிலையில் அவா்களின் பேரணிக்குத் தடை விதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில், அன்றைய தினம் தில்லியில் டிராக்டா் பேரணியில் ஈடுபடப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளில் சிலா் அறிவித்துள்ளனா். இது சட்டம் ஒழுங்குக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதுடன், ஒட்டுமொத்த தேசத்துக்கும் சங்கடத்தை உண்டாக்கும்.

போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. அதற்காக சா்வதேச அளவில் தேசத்துக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கையை ஏற்க முடியாது. எனவே குடியரசு தினத்தன்று தில்லிக்குள் டிராக்டா் உள்பட எந்த வாகனத்திலும் பேரணி மேற்கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com