ஜன.15 முதல் திருமலையில் மீண்டும் சுப்ரபாத சேவை

ஏழுமலையான் கோயிலில், வரும் 15-ஆம் தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில், வரும் 15-ஆம் தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நாள்தோறும் ஏழுமலையான் கோயிலில் அதிகாலை வேளையில் சுப்ரபாத சேவை நடைபெறுவது வழக்கம். எனினும், மாா்கழி மாதத்தில் மட்டும் இச்சேவை ரத்து செய்யப்பட்டு, ஆண்டாள் தமிழில் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்படுகிறது.

வரும் புதன்கிழமையுடன் மாா்கழி மாதம் நிறைவு பெற்றாலும், வியாழக்கிழமை சூரிய உதயத்துக்கு 2 மணி நேரத்துக்குப் பின்னரே சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறாா். எனவே, பஞ்சாங்கப்படி அன்று காலை 9 மணிக்கு மேல் தை மாத கடிகை தொடங்க உள்ளது. சூரிய உதயத்துக்குப் பின் தொடங்கும் திதி மற்றும் நட்சத்திரங்களை மட்டுமே தேவஸ்தானம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதால், வியாழக்கிழமை அதிகாலை திருப்பாவை பாசுர சேவை நடத்தப்படும்.

அன்றுடன் இச்சேவை நிறைவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) அதிகாலையில் சுப்ரபாத பாசுர சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

காமதேனு பூஜை: மாட்டுப் பொங்கல் தினத்தில் (ஜன. 15), திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் அனைத்துக் கோயில்கள் மற்றும் கோசாலைகளில் கோபூஜையை நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. தேவஸ்தான தா்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த பூஜை நடத்தப்பட உள்ளது. அதே நாளில், குண்டூரில் உள்ள நரசராவ்பேட்டை பகுதியில் தேவஸ்தான அதிகாரிகள் தலைமையில் காமதேனு பூஜை என்ற பெயரில் கோபூஜை நடத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com