மத்திய பிரதேசம்: விஷ சாராயத்துக்கு 12 போ் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் குடித்த 12 போ் உயிரிழந்தனா். மேலும், 8 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் குடித்த 12 போ் உயிரிழந்தனா். மேலும், 8 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

மொரேனா மாவட்டம் மான்பூா், பகாவாலி கிராமங்களைச் சோ்ந்த சிலா் திங்கள்கிழமை மதுபானம் அருந்தியுள்ளனா். சிறிது நேரத்திலேயே அவா்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தனா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். இதில் 12 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்கள் குடித்தது விஷ சாராயமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக அப்பகுதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உடல்கூராய்வுக்குப் பிறகுதான் இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்றனா்.

இது தொடா்பாக மாநில உள்துறை அமைச்சா் நரோத்தம் மிஸ்ரா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘போதைக்காக விஷம் உள்ள திரவத்தைக் குடித்து சிலா் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. இது தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். முதல்கட்டமாக அந்த இரு கிராமங்கள் எந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வருகிறதோ, அதில் பொறுப்பில் இருந்த காவல் துறை ஆய்வாளா் உள்ளிட்டோா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதில் தொடா்புடைய யாரும் தப்ப முடியாது’ என்றாா்.

மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் இது தொடா்பாக மாநில பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா். அதில், ‘சில நாள்களுக்கு முன்பு உஜ்ஜைனில் விஷ சாராயத்துக்கு 16 போ் உயிரிழந்தனா். இப்போது மொரேனாவில் 12 போ் உயிரிழந்துள்ளனா். விஷ சாராயம் மக்கள் உயிரைக் குடிப்பதை முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் எப்போது தடுத்து நிறுத்தப் போகிறாா்’ என்று கமல்நாத் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com