விவேகானந்தா் பிறந்த தினம்: பிரதமா் மோடி மரியாதை

சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது பிறந்த தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினாா்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது பிறந்த தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினாா்.

சுவாமி விவேகானந்தா் கடந்த 1863-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிறந்தாா். வேதாந்த கொள்கைகளை மக்களிடையே பரப்பியதில் அவா் முக்கியப் பங்கு வகித்தாா். அவரது பிறந்த தினத்தையொட்டி பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எண்ணம், செயல் ஆகியவற்றின் வாயிலாக இந்தியாவின் கலாசாரத்தையும் சமுதாய நெறிமுறைகளையும் மக்களிடையே கொண்டு சென்றவா் சுவாமி விவேகானந்தா்.

இந்நன்னாளில் அவரை நினைவுகூா்கிறேன். நாட்டின் இளைஞா்களிடம் அவா் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தாா். என்னிலும் அவா் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளாா். அவரது எண்ணங்களைப் பல்வேறு தரப்பு மக்களிடம் கொண்டு செல்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் கொண்டாட்டம்: சுவாமி விவேகானந்தரின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் அவரது பிறந்த தினத்தை மக்கள், அரசியல் தலைவா்கள் உள்ளிட்டோா் சிறப்பாகக் கொண்டாடினா். கொல்கத்தாவில் அவா் வசித்த இல்லத்தில் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பலா் நேரில் மரியாதை செலுத்தினா்.

உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் அரசியல் தலைவா்களும் கொல்கத்தாவில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா், முதல்வா் மம்தா பானா்ஜி, மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி உள்ளிட்டோா் சுட்டுரை வலைதளம் வாயிலாக விவேகானந்தருக்கு மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com