வேளாண் போராட்டத்தில் வளர்ச்சியடையும் சிறு வியாபாரிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் சிறு வியாபாரிகள் பலன் பெறுவது அதிகரித்துள்ளது.
வேளாண் போராட்டத்தில் வளர்ச்சியடையும் சிறு வியாபாரிகள் (கோப்புப்படம்)
வேளாண் போராட்டத்தில் வளர்ச்சியடையும் சிறு வியாபாரிகள் (கோப்புப்படம்)

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் சிறு வியாபாரிகள் பலன் பெறுவது அதிகரித்துள்ளது.

விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலான பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் தற்போது சிறு வியாபாரிகளின் அன்றாட வருவாய் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 50 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான தொண்டு நிறுவனத்தினர் முன்வந்து இலவசமாக தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகின்றனர்.

இதனிடையே மாலை நேர உணவு, ஊசி, நூல் கண்டு, போன்றவற்றை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளும் பலனடைந்து வருகின்றனர். 

இந்தியா கேட் அருகே ஸ்டிக்கர், பேட்ஜ்களை விற்பனை செய்யும் ராகேஷ் அரோரா என்பவர், ஊரடங்கு முன்பு மந்தமான விற்பனையால் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், ஊரடங்கில் முழுமையாக வியாபாரம் மந்தமானதால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தில்லி சிங்கு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தில் விவசாயத்தையும், விவசாயிகளின் கோரிக்கைகளையும் குறிக்கும் வகையிலான ஸ்டிக்கர்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.

ஒரு நாளுக்கு 10 பேருக்கு மிகாமல் ஸ்டிக்கர் வாங்கி வந்ததாகவும், தற்போது நாள்தோறும் விற்பனைக்கு கொண்டுவரும் 500 ஸ்டிக்கர்களில் 300 ஸ்டிக்கர்கள் வரை விற்பனையாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது டிராக்டர்களிலும், கூடாரங்களிலும் வேளாண் கோரிக்கை மற்றும் விவசாயத்தை போற்றும் வகையிலான ஸ்டிக்கர்களை அதிக அளவு ஒட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com