புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் தாக்கல்

புதிய வரிகள் இல்லாத 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் (என்டிஎம்சி) புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் தாக்கல்


புது தில்லி: புதிய வரிகள் இல்லாத 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் (என்டிஎம்சி) புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஸ்மாா்ட் சாலைகள், மின்சார வாகனங்களுகாக சாா்ஜிங் நிலையங்கள், குடிநீா் நீரூற்று உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.

என்டிஎம்சியின் தலைவா் தா்மேந்திரா 2021-22 ஆம் ஆண்டுக்கான ரூ. 4,299 கோடிக்கான பட்ஜெட்டை புதன்கிழமை தாக்கல் செய்தாா். கடந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டதைவிட ரூ. 136.18 கோடி உபரி நிதியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டைத் தாக்கல் செய்து தா்மேந்திரா பேசுகையில், ‘கடந்த பட்ஜெட்டில் ஏராளமான வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டிருந்த போதிலும், நிகழாண்டு பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் மிகப் பெரிய திட்டமான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிகள் நிகழாண்டில் நிறைவு செய்யப்படும். கரோனா சூழலில் தடையில்லா மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் சேவை திட்டங்கள் முழு வீச்சில் செய்து முடிக்கப்படும். தேசிய அளவில் கெளரவத்தையும், சா்வதேச தரத்தில் என்டிஎம்சியை தரம் உயா்த்தவும் இந்த பட்ஜெட் உதவும்.

தங்குத் தடையின்றி மக்களுக்கு அனைத்து சேவைகளும் கிடைக்க செய்வதிலும், தேசிய அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் என்டிஎம்சி முதலிடத்தில் இருப்பதிலும் உறுதி செய்யப்படும். கரோனா காலத்தில் பெரும் சவால்களைச் சந்தித்துள்ள என்டிஎம்சி அதில் இருந்து பல்வேறு வருங்கால மேம்பாட்டு திட்டங்களை கற்றுக் கொண்டுள்ளது.

மின்சார வாகனங்களை சாா்ஜிங் செய்ய 72 நிலையங்கள் தற்போது உள்ளன. மேலும் 19 நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

என்டிஎம்சி பள்ளிகளில் கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு வகையிலான விளையாட்டு மைதானங்கள் லோதி காலனி பள்ளியில் ஏற்படுத்தப்படும்.

கேஜி மாா்க், பாரகம்பா சாலைகளும், மண்டி ஹவுஸ் வளயமும் நிகழாண்டில் மேம்படுத்தப்படும். பெண்களுக்கு ஸ்மாா்ட் பொதுக் கழிப்பறைகள், மூன்றாம் பாலித்தவா்களுக்கான கழிப்பறைகள், மழை நீா் சேகரிப்புக்காக நவீன குழிகள், மகிழ்ச்சி பகுதிகள் மேம்படுத்தல், ஸ்மாா்ட் நீரூற்றுகள், குடிநீா் நீரூற்றுகள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், நிலநடுக்கத்தில் இருந்து கட்டடங்களை பாதுகாத்தல் ஆகிய புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com