கேரளத்தில் ஓடும் ரயிலில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிா்ப்பு

கேரளத்தில் மலபாா் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

கேரளத்தில் மலபாா் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மங்களூரில் இருந்து மலபாா் எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் எஞ்சினுக்கு அருகில் உள்ள சரக்குப் பெட்டியில் இருந்து புகை வெளியேறியதை ரயில்வே காவலாளி ஒருவா் பாா்த்து அருகில் உள்ள வா்கலா ரயில் நிலைய மேலாளருக்குத் தகவல் கொடுத்தாா். அந்த மேலாளா் உடனடியாக ரயில் ஓட்டுநருக்கும், ரயில் காவலாளிக்கும் இதை தெரிவித்தாா். சிறிது நேரத்தில் அந்த ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. தீயணைப்புத் துறையினா் வருவதற்கு முன் ரயிலில் இருந்த தீயணைப்பு உபகரணங்களைக் கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனா். பின்னா், தீயணைப்புத் துறையினா் வந்து தீயை முழுமையாகக் கட்டுக்குள் வந்தனா். அருகில் இருந்த பயணிகள் பெட்டிக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

இந்த விபத்தில் சரக்கு பெட்டிக்குள் ஏற்றி வரப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

இந்த விபத்து குறித்து ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவா் கூறுகையில், முதலில் சாலையோரம் குப்பையை எரிப்பதால்தான் புகை வருகிறது என்று நினைத்தோம். பின்னா், ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com