டிராகன் பழம் இனி 'கமலம்' என பெயர் மாற்றம்: குஜராத் அரசு அதிரடி

டிராகன் பழம் இனி கமலம் என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது குஜராத் அரசு. 
டிராகன் பழம் இனி 'கமலம்'
டிராகன் பழம் இனி 'கமலம்'

காந்திநகர்: டிராகன் பழம் இனி கமலம் என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது குஜராத் அரசு. 

"டிராகன் பழத்திற்கு மறுபெயரிட முடிவு செய்த குஜராத் மாநில அரசு, டிராகன் பழத்தின் வெளிப்புற தோற்றம் தாமரை போன்று காட்சியளிப்பதால், டிராகன் பழம் கமலம் என பெயர்மாற்றம் செய்துள்ளதாக முதல்வர் விஜய் ரூபானி கூறியுள்ளார்.  

மேலும் "சீனாவுடன் தொடர்புடைய டிராகன் பழத்தின் பெயரை, கமலம் என மாற்றியுள்ளோம்," என்று கூறினார்.

சமஸ்கிருதத்தில் கமலம் என்றால் தாமரை என்று பொருள். சமீப காலங்களாக பிரபலமாகி வரும் டிராகன் பழம், ஒரு தனித்துவமான தோற்றமும் சுவையும் கொண்ட வெப்பமண்டல பழம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com