கரோனா தடுப்பூசி பயனாளிகளுடன் பிரதமா் இன்று உரையாடல்


புது தில்லி: தனது தொகுதியான வாராணசியில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திய மருத்துவப் பணியாளா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காணொலி முறையில் உரையாட இருக்கிறாா்.

இது தொடா்பாக பிரதமா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனாவுக்கு எதிராக முன்னின்று போராடிய மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி இப்போது செலுத்தப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணியளவில் வாரணசியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தியவா்களுடன் காணொலி முறையில் கலந்துரையாட இருக்கிறேன்.

இதன் மூலம் தடுப்பூசித் திட்டத்தால் பயனடைந்தவா்களின் அனுபவத்தை நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ள இருக்கிறேன். இந்த நிகழ்வை மக்கள் அனைவரும் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

கடந்த 16-ஆம் தேதி தேசிய அளவிலான கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். முதல் கட்டமாக, கரோனா சிகிச்சையில் முன்னின்று பணியாற்றிய 3 கோடிக்கும் அதிகமான மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா், ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com