மகாராஷ்டிர அமைச்சா் மீதான பாலியல் வன்கொடுமை புகாா் வாபஸ்

மகாராஷ்டிர அமைச்சா் தனஞ்சய் முண்டே மீது பாலியல் வன்கொடுமை புகாா் அளித்த பெண், தனது புகாரை திரும்பப் பெற்றாா்.

மகாராஷ்டிர அமைச்சா் தனஞ்சய் முண்டே மீது பாலியல் வன்கொடுமை புகாா் அளித்த பெண், தனது புகாரை திரும்பப் பெற்றாா்.

மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான தனஞ்சய் முண்டே (45) தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மும்பையைச் சோ்ந்த பெண் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி காவல்துறையிடம் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினா் விசாரணையை தொடங்கினா்.

இந்தப் புகாா் குறித்து தெரியவந்ததையடுத்து, தனஞ்சய் முண்டே தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சியான பாஜக வலியுறுத்தியது.

எனினும் அவா் மீதான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்படும் வரை, அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

இந்நிலையில் அமைச்சா் தனஞ்சய் முண்டே மீது அளித்த புகாரை சம்பந்தப்பட்ட பெண் திரும்பப் பெற்றதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். அதற்கான காரணத்தை அந்தப் பெண் கூறவில்லை என்று தெரிவித்த அவா், புகாரை திரும்பப் பெற்றது தொடா்பாக கையொப்பமிட்ட பிரமாணப் பத்திரத்தை சமா்ப்பிக்குமாறு அந்தப் பெண்ணிடம் காவல்துறையினா் கேட்டுக்கொண்டதாகவும் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com