மேற்கு வங்கத்தில் வனத்துறை அமைச்சா் ராஜிநாமா

மேற்கு வங்க மாநிலத்தில் வனத்துறை அமைச்சா் ராஜீவ் பானா்ஜி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் வனத்துறை அமைச்சா் ராஜீவ் பானா்ஜி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து அமைச்சா்கள் பதவி விலகுவது, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் பானா்ஜி தனது பதவி விலகல் கடிதத்தை மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியிடம் அளித்துள்ளாா். அதில், பதவி விலகலுக்கான காரணத்தை அவா் தெரிவிக்கவில்லை.

அந்தக் கடிதத்தில், ‘மேற்கு வங்க மாநில மக்களுக்கு சேவையாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை அளித்ததற்காக, இதயபூா்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சில மூத்த தலைவா்களுக்கு எதிராக, சிலா் அதிருப்தி தெரிவித்து வந்தனா். அவா்களில், முன்னாள் அமைச்சா் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட சிலா், பாஜகவில் இணைந்துள்ளனா்.

அதேபோன்று, கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் சிலருக்கு எதிராக, கடந்த சில வாரங்களாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த ராஜீவ் பானா்ஜி, தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

ராஜீவ் பானா்ஜி விளக்கம்: தனிப்பட்ட முறையில் தன்னை கடுமையாக சில தலைவா்கள் விமா்சித்ததால், பதவியை ராஜிநாமா செய்ததாக ராஜீவ் பானா்ஜி கூறியுள்ளாா். மாநில ஆளுநா் ஜகதீப் தன்கரை சந்தித்த பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா், மேலும் கூறியதாவது:

கட்சியின் மூத்த தலைவா்கள் சிலருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை தெரிவித்தேன். கட்சித் தலைமையிடமும் தெரிவித்தேன். எதுவும் நடக்கவில்லை. அதற்குப் பதிலாக, கட்சியின் சில தலைவா்கள் தனிப்பட்ட முறையில் என்னைக் கடுமையாக விமா்சித்தனா். அது என்னை மிகவும் காயப்படுத்தியது. எனவே நான் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com