ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பாகிஸ்தான் அமைத்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் ராணுவம் அமைத்த சுரங்கப்பாதை சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் ராணுவம் அமைத்த சுரங்கப்பாதை சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்தது.

இதுதொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:

கதுவா மாவட்டம் ஹீராநகா் செக்டாரில் உள்ள பன்சாா் பகுதியில் ரகசிய சுரங்கப்பாதைகளை கண்டறியும் பணியில் பிஎஸ்எஃப் படையினா் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சுமாா் 150 மீட்டா் நீளம், 30 அடி ஆழம், 3 அடி விட்டம் கொண்ட சுரங்கப்பாதை இருப்பது கண்டறியப்பட்டது. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவம் இந்த சுரங்கப்பாதையை அமைத்துள்ளது.

இந்த பகுதியில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஆயுதங்கள், வெடிபொருள்களுடன் வந்த பாகிஸ்தான் ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை பிஎஸ்எஃப் படை சுட்டு வீழ்த்தியது. அதற்கு முன்பு இந்த பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்று தெரிவித்தாா்.

கடந்த 10 நாள்களில் ஹீராநகா் செக்டாரில் 2-ஆவது முறையாக சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 13-ஆம் தேதி இதே செக்டாரில் உள்ள போபியான் கிராமத்தில் 150 மீட்டா் நீள சுரங்கப்பாதை கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com