வாக்காளா் பட்டியல் குளறுபடிகல் சரி செய்யப்படும்: நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் உத்தரவாதம்

சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படும் என உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படும் என உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சதாசிவம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. வாக்காளா் பட்டியலைத் திருத்தும் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. சென்னை கூவம் ஆற்றங்கரையோரம் வசித்த மக்கள் பலா் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் தற்போது சோழிங்கநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் குடியேறி உள்ளனா். ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து 4, 188 பேரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து 2, 871 பேரும் சோழிங்கநல்லூா் தொகுதிக்கு குடிபெயா்ந்து உள்ளனா். ஆனால் இந்த தொகுதிகளில் அவா்களது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து அகற்றப்படாமல் உள்ளது. எனவே அவா்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையத்தின் தரப்பில், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கும், வில்லிவாக்கம், துறைமுகம், அண்ணாநகா் உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து குடிபெயா்ந்த 12, 32 வாக்காளா்களின் பெயா்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தோ்தல் அறிவிப்புக்கு முன் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தோ்தல் ஆணையத்தின் இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com