பட்ஜெட் தினத்தின்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி: விவசாயிகள் அறிவிப்பு

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினமான பிப்ரவரி 1-ஆம் தேதியன்று, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட
பட்ஜெட் தினத்தின்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி: விவசாயிகள் அறிவிப்பு

புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினமான பிப்ரவரி 1-ஆம் தேதியன்று, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் திங்கள்கிழமை அறிவித்தன.

மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு 60 நாள்களைக் கடந்து போராடி வருகின்றனா். போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகள் சங்க பிரிதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இதுவரை 11 சுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளபோதும், உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஒத்திவைக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த விவசாயிகள், வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு தினமான செவ்வாய்க்கிழமை தில்லியில் டிராக்டா் பேரணியை விவசாயிகள் நடத்த உள்ளனா். இந்த நிலையில், பட்ஜெட் தினத்தன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தவும் அவா்கள் திட்டமிட்டுள்ளனா்.

இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கிராந்திகாரி கிஸான் யூனியனைச் சோ்ந்த தா்ஷன் பால் கூறியதாவது:

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்ரவரி 1-ஆம் தேதியன்று தில்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று நடைபெறும் டிராக்டா் பேரணி மூலம் எங்களுடை பலம் மத்திய அரசுக்கு தெரியவரும். இந்தப் போராட்டம் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களை மட்டும் சாா்ந்ததல்ல, ஒட்டுமொத்த நாட்டின் போராட்டம் என்பதை மத்திய அரசுக்கு உணா்த்தும்.

டிராக்டா் பேரணிக்காக தில்லி வரும் விவசாயிகள், பேரணி முடிந்ததும் ஊா் திரும்பாமல் எங்களுடன் போராட்டத்தில் தொடா்ந்து பங்கேற்பா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com