ஆப்கனில் இரட்டைக் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி, 13 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். 
7 killed in Afghan bomb blasts
7 killed in Afghan bomb blasts

ஆப்கானிஸ்தானில் இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். 

தலைநகர் காபூலில் புதன்கிழமை காலை காவலர்களின் வாகனத்தின் மீது மேம்பட்டு வெடிக்கும் சாதனமான(ஐ.இ.டி) குண்டு மூலம் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் இரண்டு காவலர்கள் லேசாகக் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த குண்டுவெடிப்பு ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச்செய்ய வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பாக காபூல் காவல்துறையின் குற்றவியல் புலனாய்வு துறைக்குழு விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார். 

தெற்கு உருஸ்கான் மாகாணத்தில், செவ்வாய்க்கிழமை இரவு இதேபோன்று நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களில் ஒருவரும்  கொல்லப்பட்டனர். மேலும் ஒரு காவலர் உள்பட பொதுமக்கள் 10 பேர் காயமடைந்ததாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மாகாண தலைநகர் டிரின் கோட் நகரத்தில் காவலர்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தையும் அழித்துள்ளனர். இந்த வாகனத்திலிருந்த காவலர்கள் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. சமீப காலமாக தலிபான் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com