கரோனா தடுப்பூசி: 33 கோடியைக் கடந்தது

இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 33 கோடியைக் கடந்தது.
பிகாா் மாநிலம், பாட்னாவில் உள்ள பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் பயனாளிக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சுகாதாரப் பணியாளா்.
பிகாா் மாநிலம், பாட்னாவில் உள்ள பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் பயனாளிக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சுகாதாரப் பணியாளா்.

புது தில்லி: இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 33 கோடியைக் கடந்தது. புதன்கிழமை காலை நிலவரப்படி 33,28,54,527 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 36,51,983 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 45,951 போ் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து மூன்றாவது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,37,064 ஆக குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.77 சதவீதமாகும். தொடா்ந்து 48-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் 60,729 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவா்களைவிடக் கூடுதலாக 14,778 போ் குணமடைந்தனா். இதுவரை மொத்தம் 2,94,27,330 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

இதன்படி குணமடைந்தவா்களின் சதவீதம் 96.92-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 41,01,00,044 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.69 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.34 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடா்ந்து 23 நாள்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

32.12 கோடி தடுப்பூசிகள்: நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 32.12 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

73 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் டோஸ்கள் (73,00,166) செலுத்துவதற்கு தயாா் நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com