2022 உ.பி. பேரவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களில் வெல்லும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

2022ஆம் ஆண்டு உ.பி. பேரவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களில் வெல்லும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.  
2022 உ.பி. பேரவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களில் வெல்லும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

2022ஆம் ஆண்டு உ.பி. பேரவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களில் வெல்லும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 
உத்தர பிரதேசத்தில் உள்ள 75 மாவட்ட பஞ்சாயத்துகளின் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தோ்தல் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா்கள் தோ்தலில் வாக்களித்தனா். 
தோ்தலுக்குப் பிறகு மாநில பாஜக தலைவா் ஸ்வதந்திர தேவ் சிங் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘67 இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளா்களே வெற்றி பெற்றனா். இந்த மாபெரும் வெற்றிக்காக மாநில மக்களுக்கும் அயராது உழைத்த கட்சித் தொண்டா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா். 
இந்த நிலையில் 2022 உ.பி. பேரவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களில் வெல்லும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 75 மாவட்டங்களுக்கான பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 67 இடங்களை பாஜக வென்றுள்ளன. 
பாஜக தொண்டர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். 2022 தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். 300 க்கும் மேற்பட்ட இடங்களை நாங்கள் வெல்வோம்" என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com