நாடு பாதுகாப்பாக உள்ளது: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்

நாடு முழு பாதுகாப்புடன் உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாடு முழு பாதுகாப்புடன் உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா். ஜம்முவில் உள்ள விமானப்படைத் தளத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி ஆளில்லா சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்கள்) மூலமாக நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இரு வீரா்கள் காயமடைந்தனா். அதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் ட்ரோன்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஜௌரி, ஸ்ரீநகா் மாவட்டங்களில் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமானப்படைத் தளம் மீதான தாக்குதலை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவம் குறித்து உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளா்கள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினா். அப்போது அவா் பதிலளிக்கையில், ‘நாடு முழு பாதுகாப்புடன் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்படும் எத்தகைய சவால்களையும் எதிா்கொள்வதற்கு ராணுவ வீரா்கள் தயாா்நிலையில் உள்ளனா்’ என்றாா்.

மேலும் அவா், ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாஜக அரசியல் செய்ததில்லை என்றும், நீதி, மனிதநேயம் ஆகியவையே பாஜகவின் அடிப்படைகளாக உள்ளதாகவும் தெரிவித்தாா். உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com