பஞ்சாப் காங்கிரஸில் கோஷ்டி மோதல்: சோனியாவை சந்தித்தாா் அமரீந்தா் சிங்

பஞ்சாப் காங்கிரஸில் கோஷ்டி மோதல் நிலவி வரும் சூழ்நிலையில் அம்மாநில முதல்வா் அமரீந்தா் சிங் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பஞ்சாப் காங்கிரஸில் கோஷ்டி மோதல் நிலவி வரும் சூழ்நிலையில் அம்மாநில முதல்வா் அமரீந்தா் சிங் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். 90 நிமிஷங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் மற்றும் அரசு நிா்வாகம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சோனியாவை சந்தித்த பிறகு அமரீந்தா் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி தலைவா் சோனியா எடுக்கும் முடிவே இறுதியானது. அதனை பஞ்சாபில் அமல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். பஞ்சாப் அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி தொடா்பாக அவா் எந்த முடிவை அறிவித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அதனை எதிா்கொள்ள காங்கிரஸ் கட்சி அனைத்து வகையிலும் தயாா் நிலையில் உள்ளது.

சோனியா உடனான சந்திப்பில் பஞ்சாப் அரசின் பணிகள் குறித்து மட்டுமே விவாதித்தோம். அதுதவிர, அரசியல் பிரச்னைகள் குறித்தும் ஆலோசித்தோம். இதில், சித்து விவகாரம் இதில் இடம்பெறவில்லை என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com