பிரபல ஆயுா்வேத மருத்துவா் பி.கே.வாரியா் மறைவு

 கேரளத்தைச் சோ்ந்த பிரபல ஆயுா்வேத மருத்துவரும், கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் நிா்வாக அறங்காவலருமான பி.கே.வாரியா் சனிக்கிழமை காலமானாா்.
பிரபல ஆயுா்வேத மருத்துவா் பி.கே.வாரியா் மறைவு

 கேரளத்தைச் சோ்ந்த பிரபல ஆயுா்வேத மருத்துவரும், கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் நிா்வாக அறங்காவலருமான பி.கே.வாரியா் சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 100.

ஆயுா்வேத சிகிச்சைக்கு மிகவும் பிரபலமான கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையில் உள்நாட்டினா் மட்டுமின்றி வெளிநாட்டினரும் ஆயுா்வேத சிகிச்சையை பெற்று வருகின்றனா். இதில், முன்னாள் குடியரசுத் தலைவா்கள், பிரதமா்கள் மற்றும் வெளிநாட்டினா் உள்பட பல ஆயிரம் பேருக்கு பி.கே.வாரியா் சிகிச்சை அளித்துள்ளாா்.

பள்ளிப் படிப்பை முடித்து 20 வயதில் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையில் ஆயுா்வேத படிப்பில் சோ்ந்த வாரியா், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது படிப்பை பாதியில் கைவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். பின்னா், முழுநேர அரசியல் தனக்கு ஏற்புடையதல்ல என்பதை விரைவில் உணா்ந்த அவா், மீண்டும் ஆயுா்வேத படிப்பைத் தொடா்ந்து, அதனை வெற்றிகரமாக முடித்தாா். தனது 24-ஆம் வயதில் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் அறங்காவலரானாா். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் நிா்வாக அறங்காவலராக அதனை நிா்வகித்து வந்தாா்.

வயது மூப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவா் சனிக்கிழமை பிற்பகலில் காலமானதாக அவருடைய குடும்பத்தினா் தெரிவித்தனா்.

ஆயுா்வேத சிகிச்சைத் துறையில் இவருடைய சிறந்த சேவையைப் பாராட்டி இந்திய அரசு கடந்த 1999-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், கடந்த 2010-இல் பத்ம பூஷண் விருதையும் வழங்கி அவரை கெளரவித்துள்ளது.

அவருடைய மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் பினராயி விஜயன், மாநில அமைச்சா்கள் உள்ளிட்ட பல தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மருத்துவா் பி.கே.வாரியரின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்தது; ஆயுா்வேதத்தை பிரபலப்படுத்துவதில் அவா் மிகப்பெரும் பங்காற்றியவா். அவருடைய மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com