தடுப்பூசிக்கு குஜராத் மக்கள் தயங்குவது ஏன்?: அமித் ஷா

தடுப்பூசி செலுத்திக்கொள்ள குஜராத் மக்கள் தயங்குவது ஏன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். 
அமித் ஷா
அமித் ஷா

தடுப்பூசி செலுத்திக்கொள்ள குஜராத் மக்கள் தயங்குவது ஏன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். 

குஜராத் மாநிலம் காந்தி நகரிலுள்ள ராஜ்பவனில் கரோனா முன்களப் பணியாளர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசியதாவது, குஜராத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களுக்கு தடுப்பூசி குறித்த தயக்கம் உள்ளது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கடமை. 

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி 5 கிலோ உணவுப் பொருள்களை வழங்க உத்தரவிட்டுள்ளார். தீபாவளி வரை அவை தொடர்ந்து வழங்கப்படும். 

கரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட சுகாதாரப் பணியாளர்களைப் பாராட்டிய அவர், அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com