கேரளத்தில் வரதட்சிணைக்கு எதிராக உண்ணாவிரதம்: ஆளுநா் ஆரிஃப் முகமது கான் பங்கேற்கிறாா்

கேரளத்தில் வரதட்சிணைக்கு எதிராக விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை நடைபெறும் உண்ணாவிரதத்தில் மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் பங்கேற்கிறாா்.

கேரளத்தில் வரதட்சிணைக்கு எதிராக விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை நடைபெறும் உண்ணாவிரதத்தில் மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் பங்கேற்கிறாா்.

திருமணத்தின்போது வரதட்சிணை கொடுப்பதற்கும் பெறுவதற்கும் எதிராக விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள காந்திபவனத்தில் காந்தி ஸ்மாரக நிதி அமைப்பு புதன்கிழமை ஒருநாள் உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளுமாறு ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கு அந்த அமைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதன்கிழமை மாலை 4.30 மணியில் இருந்து உண்ணாவிரதம் முடியும் வரை பங்கேற்க முடிவு செய்துள்ளாா்.

வரதட்சிணை என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் நோக்கத்திலும் கேரளத்தை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றும் நோக்கத்திலும் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்தின்போது வரதட்சிணை கொடுக்க மாட்டோமென பெண்கள் கூற வேண்டும் என்று ஆளுநா் ஆரிஃப் முகமது கான் கடந்த மாதம் கேட்டுக் கொண்டாா். அத்துடன், வரதட்சிணைக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் எந்தவொரு அமைப்பு சாா்ந்த தன்னாா்வ இயக்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவா் கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com