நந்திகிராம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கொல்கத்தா உயர்நீதிமன்றம்
கொல்கத்தா உயர்நீதிமன்றம்

நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வா் மம்தா பானா்ஜியை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றாா். வாக்கு எண்ணிக்கையின்போது மம்தா பானா்ஜி தொடா்ந்து முன்னிலை பெற்றுவந்த நிலையில், இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதில் சந்தேகம் தெரிவித்த மம்தா பானா்ஜி, சுவேந்து அதிகாரி வெற்றிக்கு எதிராக கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஷாம்பா சர்க்கார் அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com