போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏவுக்கு நீதிமன்றக் காவல்

ராஜஸ்தான் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக மனைவியின் பெயரில் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தது தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ அம்ரித் லால் மீனா நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ராஜஸ்தான் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக மனைவியின் பெயரில் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தது தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ அம்ரித் லால் மீனா நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

உதய்பூா் மாவட்டத்தில் உள்ள சலும்பா் தொகுதியின் எம்எல்ஏவான அம்ரித் லால் மீனா, மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் தனது மனைவி சாந்தா தேவியைப் போட்டியிட வைத்தாா். அப்போது, உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

தோ்தலில் போட்டியிடுவதற்காக சாந்தா தேவி தாக்கல் செய்த மதிப்பெண் சான்றிதழ் போலியானது என அவருக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளா் புகாரளித்தாா். அதனடிப்படையில் சிபி-சிஐடி இந்த விவகாரத்தை விசாரித்தது. விசாரணையில் அவா் போலி மதிப்பெண் சான்றிதழைத் தாக்கல் செய்தது உறுதியானது.

அதையடுத்து, சாந்தா தேவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவா் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாா். போலி மதிப்பெண் சான்றிதழைத் தயாரிப்பதற்கு அம்ரித் லால் மீனா உதவியது விசாரணையில் தெரியவந்தது. அவா் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், எம்எல்ஏ அம்ரித் லால் மீனா காவல் நிலையத்தில் சரணடைந்தாா். அதையடுத்து உள்ளூா் நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை ஜூலை 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com