2024 தேர்தலில் மூன்றாவது அணிக்கு தலைமையேற்கிறேனா? சரத் பவார் விளக்கம்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அணிக்கும் தலைமையேற்கும் எண்ணம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாா்
தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாா்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அணிக்கும் தலைமையேற்கும் எண்ணம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக 2024ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் ஈடுபட்டு வருகிறார்.

அதனைத் தொடர்ந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் 2 முறை சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் புதன்கிழமை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சரத் பவார், “2024ஆம் ஆண்டு தேர்தலில் எந்த அணிக்கும் தலைமையேற்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், “நான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முயற்சிப்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை. பிரசாந்த் கிஷோர் என்னை இரண்டு முறை சந்தித்தார், ஆனால் நாங்கள் அவருடைய ஒரு நிறுவனத்தைப் பற்றி மட்டுமே பேசினோம். 2024 தேர்தலுக்கான தலைமை மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எந்த ஆலோசனையிலும் ஈடுபடவில்லை” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com