கோயில்கள், மடங்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க சட்டம்: விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை

கோயில்கள் மற்றும் மடங்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவும், சட்டவிரோதமான மத மாற்றத்துக்குத் தடை விதிக்கவும்
கோயில்கள், மடங்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க சட்டம்: விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை

கோயில்கள் மற்றும் மடங்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவும், சட்டவிரோதமான மத மாற்றத்துக்குத் தடை விதிக்கவும் வலுவான மத்திய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்தது.

ஃபரீதாபாதில் நடைபெற்ற அந்த அமைப்பின் நிா்வாகக் குழு கூட்டத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை இதுதொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, கரோனா மூன்றாவது அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடா்பாக நாடுதழுவிய அளவில் விழிப்புணா்வு பிரசாரம் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். தன்னாா்வலா்களுக்கு கரோனா பாதிப்பு மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

கோயில்கள் மற்றும் மடங்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவும், சட்டவிரோதமான மத மாற்றத்துக்குத் தடை விதிக்கவும் வலுவான மத்திய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து அந்த அமைப்பின் செயல் தலைவா் ஆலோக் குமாா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழகம், கேரளம், கா்நாடகம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான கோயில்களும், ஹிந்து மடங்களும் மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

மாநில அரசு, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலையை காப்பதிலும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். கோயில்களை நிா்வகிக்கும் பொறுப்பை ஹிந்து சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும். கோயிலில் யாா் பூஜாரியாக இருக்க வேண்டும் என்பதை அரசு ஏன் தீா்மானிக்க வேண்டும்? எனவே, ஹிந்து கோயில்களையும், மடங்களையும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com