சென்னை ஐ.ஐ.டி.யில் ஜாதி, மத பாகுபாடா? திமுக எம்.பி.க்கு மத்திய அமைச்சர் பதில்

சென்னை ஐ.ஐ.டி.யில் ஜாதி, மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படவில்லை. அதுமட்டுமல்ல, இத்தகைய வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மக்களவையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பி

சென்னை ஐ.ஐ.டி.யில் ஜாதி, மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படவில்லை. அதுமட்டுமல்ல, இத்தகைய வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மக்களவையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை எழுத்து மூலம் பதில் தெரிவித்தார்.
 சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ஜாதி, மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் அதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியிருந்தார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் தொடரும் நிலையில், துணைப் பேராசிரியர்கள் பலர் பதவி விலகி வருகின்றனர். இதைத் தடுக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? எனவும் அவர் கேட்டிருந்தார்.
 அதற்கு, சென்னை ஐ.ஐ.டி.யில் ஜாதி, மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படவில்லை. இத்தகைய வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் மனநிலையை சீர்செய்யத் தேவையான மனநல மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் வாரத்தில் 7 நாள்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், அந்த நிறுவனத்தின் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு நிலை அதிகாரிகள் கலந்துரையாடுகின்றனர் என்று அவர் பதில் அளித்துள்ளார்.
 ஐ.ஐ.டி.க்களில் இடஒதுக்கீடு ரத்தா?: ஐ.ஐ.டி.க்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் நிலை என்ன? இடஒதுக்கீட்டை ரத்து செய்ய தில்லி ஐஐடி இயக்குநர் டாக்டர் வி.ராம்கோபால் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதா ? என்கிற மற்றோரு கேள்விக்கும் மத்திய கல்வி அமைச்சர் பிரதான் பதிலளித்தார்.
 "மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் 2019-இன்படி தில்லி, இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநர் தலைமையில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
 இந்த அறிக்கையை அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்களின் சுற்றுக்கும் அனுப்பப்பட்டு குறிப்பு பெறப்பட்டது. தற்போது இந்த அறிக்கை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்தக் குழு ஆராய்ந்து வருகிறது. தற்போது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் சிபாரிகளின்படி, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது என மத்திய கல்வி அமைச்சர் பதிலளித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com