விவசாயிகள் பேரணி: அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்

தில்லியில் விவசாயிகள் பேரணி நடைபெறவுள்ளதையொட்டி அங்குள்ள அமெரிக்கா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தில்லியில் விவசாயிகள் பேரணி நடைபெறவுள்ளதையொட்டி அங்குள்ள அமெரிக்கா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கியுள்ளதையொட்டி தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனா். இதையொட்டி அங்குள்ள சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தினந்தோறும் ஜந்தா் மந்தருக்கு பேரணியாக செல்லவுள்ளனா்.

இந்நிலையில் தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘தில்லியிலும், அதைச் சுற்றியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடலாம் என ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற போராட்டங்கள் வன்முறையில் முடிந்துள்ளன. எனவே இங்குள்ள அமெரிக்கா்கள் பாதுகாப்பாக இருக்கவும், நாடாளுமன்றம் உள்ள இடம் உள்பட முக்கிய பகுதிகளுக்கு செல்லாமல் கூட்ட நெரிசல்களை தவிா்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com