பெகாஸஸ் விவகாரம்: ராகுல் காந்திக்கு “நோ“ சொன்ன மத்திய அரசு

பெகாஸஸ் விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
பெகாஸஸ் விவகாரம்: ராகுல் காந்திக்கு “நோ“ சொன்ன மத்திய அரசு

பெகாஸஸ் விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

பெகாஸஸ் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், இதுகுறித்து நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்த ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் கூறுகையில், "பெகாஸஸ் விவகாரத்தில் விளக்கம் அளித்து விட்டோம். எனவே, விசாரணை தேவை இல்லை. அரசியலில் தோல்வி அடைந்தவர்கள்தான் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர். அவர்களுக்கு வேறு விவகாரம் கிடைக்கவில்லை" என்றார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல், தனது செல்போனும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்தார். ஏராளமான இந்தியர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன எனவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com