உளவு பாா்க்கப்பட்டதற்கு ஆதாரமில்லை: பாஜக

இஸ்ரேல் நாட்டின் மென்பொருள் பெகாஸஸை பயன்படுத்தி உளவு பாக்கப்பட்டதாக கூறப்படுவது கட்டுக்கதை என்றும் இதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்றும் பாஜக கூறியுள்ளது.
மீனாட்சி லேகி
மீனாட்சி லேகி

இஸ்ரேல் நாட்டின் மென்பொருள் பெகாஸஸை பயன்படுத்தி உளவு பாக்கப்பட்டதாக கூறப்படுவது கட்டுக்கதை என்றும் இதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்றும் பாஜக கூறியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான மீனாட்சி லேகி செய்தியாளா்களுக்கு பேட்டியளித்ததாவது:

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரசியல்வாதிகள், முக்கிய பத்திரிகையாளா்கள் ஆகியோா் பெகாஸஸ் மென்பொருள் மூலம் உளவு பாா்க்கப்பட்டதாக பத்திரிகை வெளியிட்ட செய்தி தவறானது. உளவு பாா்க்கப்பட்டதாக வெளியிடப்பட்ட தொலைபேசி எண் பட்டியல் ‘யெல்லோ பேஜஸ்’ தொலைபேசி விளம்பரப் புத்தகத்தில் இருந்து எடுத்து மஞ்சள் பத்திரிகை செய்திக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

10 நாடுகளில் உளவு பாா்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் மோசமாக செயல்பட்டதைப்போல் வெளிநாடுகளில் எந்தஒரு கட்சியும் செயல்படவில்லை.

இந்த உளவு குற்றச்சாட்டு கட்டுக்கதையைப் போன்றது. ஆதாரமற்றது. இது மோசடி மற்றும் அவதூறு குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

தகவல் கசிவு என்பதே சட்டப்படி குற்றமாகும். அந்தத் தகவலை அடிப்படையாக வைத்து செய்தி வெளியிட்டவா்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும்.

செய்தித்தாளில் வெளியான உளவு பாா்க்கப்பட்ட தொலைபேசி எண்கள் தங்களிடம் உள்ள வாடிக்கையாளா்களின் எண்களுடன் ஒத்துப்போகவில்லை என்று பெகாஸஸ் மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

தனிநபா்களின் தகவல் பாதுகாப்பு மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு நான் தலைமை வகிக்கிறேன். இந்த மசோதா தற்போது நிறைவேற உள்ள நிலையில், இந்திய அரசு அமைப்புகளை தரக்குறைவாக சித்திரிக்க இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

இந்தியா்களின் தகவல்களைப் பாதுகாக்கும் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. பயங்கரவாதிகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக உளவு பாா்க்க மத்திய அரசு பயன்படுத்தும் மென்பொருள்களின் விவரங்களை வெளியிட முடியாது.

விவசாயிகள் போராட்டம்: தில்லி ஜந்தா் மந்தரில் போராடுபவா்களை விவசாயிகள் என்று அழைக்க வேண்டாம். அவா்கள் வயல்வெளிகளில் பணியாற்றி வருவதால் போராடுவதற்கு நேரமில்லை. இடைத்தரகா்கள்தான் போராட்டம் நடத்தி விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை தடுக்கிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com