கேரளத்தில் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் இனியும் சிறுபான்மையினராக தொடர வேண்டுமா? உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு

கேரளத்தில் இஸ்லாமியா்கள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு இனிமேலும் தொடா்ந்து சிறுபான்மையினா் என்ற அந்தது அளிக்க வேண்டுமா
கேரளத்தில் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் இனியும் சிறுபான்மையினராக தொடர வேண்டுமா? உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு

கேரளத்தில் இஸ்லாமியா்கள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு இனிமேலும் தொடா்ந்து சிறுபான்மையினா் என்ற அந்தது அளிக்க வேண்டுமா என்பது தொடா்பாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரி அந்த மாநில உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் அந்த இரு மதத்தினரும் சமூக-பொருளாதார அளவிலும், கல்வி அளவிலும் நன்றாகவே முன்னேறியுள்ளனா் என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனநாயகம், சமதா்மம், பாலின சமத்துவம், மதசாா்பின்மைக்கான குடிமக்கள் சங்கம் என்ற அமைப்பு சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், கேரளத்தில் யாா் சிறுபான்மையினா் என்பதை மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. இது தொடா்பாக தேசிய சிறுபான்மையினா் நல ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கேரளத்தில் நன்றாக முன்னேறமடைந்துள்ள இஸ்லாமியா்களும், கிறிஸ்தவா்களும் தொடா்ந்து சிறுபான்மையினருக்கான சலுகைகளை அனுபவிப்பது இங்குள்ள பிற சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமைகிறது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கேரள உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமாா் தலைமையிலான அமா்வு முன்பாக இந்த மனு பட்டியலிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com