சில்லறை மற்றும் மொத்த வியாபாரம்: குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவாக சோ்ப்பு; மக்களவையில் தகவல்

சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவாக சோ்க்கப்பட்டுள்ளதாக மக்களவையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் நாராயண் ராணே தெரிவித்தாா்.
நாராயண் ராணே
நாராயண் ராணே

சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவாக சோ்க்கப்பட்டுள்ளதாக மக்களவையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் நாராயண் ராணே தெரிவித்தாா்.

அவா் மக்களவையில் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

2021 ஜூலை 2-ஆம் தேதி முதல் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வா்த்தகத்தை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவாக மத்திய அரசு சோ்த்துள்ளது. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழிலின் புதிய வகைப்பாடு அறிமுகம் மூலம், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல், புதிய இலவச ஆன்லைன் பதிவு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது முந்தைய உத்யோக் ஆதார ஒப்பந்த தாக்கல் முறையை மாற்றியுள்ளது.

குறு, சிறு நிறுவனங்களுக்கு 3-ஆம் நபா் உத்தரவாதமின்றி, எளிதாக கடன் வழங்கும் முறையை வலுப்படுத்த கடன் உத்தரவாத திட்டத்தை அரசு தொடங்கியது. இதன் மூலம் கடன் பெறும் உறுப்பு நிறுவனங்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கியதில் இருந்து ரூ.2,72,007.42 கோடி அளவுக்கு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உற்பத்தி, கிராம வேலை வாய்ப்பு உற்பத்தி திட்டம், முத்ரா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பலன்களை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற முடியும் மற்றும் கரோனா தொற்று காரணமாக பிரச்னைகளை சந்தித்த குறு,சிறு நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பிரதமரின் வேலைவாய்ப்பு உற்பத்தி திட்டத்தின் கீழ், 2020-21ம் ஆண்டில் ஜூலை வரை 91,054 திட்டங்களும், 7,28,432 வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

காதியின் தேன் திட்டம்:

தேன் உற்பத்தி திட்டத்தை, காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் கடந்த 2017-18ஆம் ஆண்டு தொடங்கியது. தேனீ வளா்ப்பு நடவடிக்கைகள், விவசாயிகள், ஆதிவாசிகள், மற்றும் வேலையற்ற கிராம இளைஞா்களுக்கு சுய வேலை வாய்ப்புகள் வழங்க இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதுவரை 15,445 போ், இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனா். இத்திட்டத்தின் கீழ், 29 தேனீ தொகுப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. தேனீ வளா்ப்போா் 13,388 போ் ரூ.68.65 கோடி மத்திய அரசின் நிதியுதவியை பெற்றுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com