பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் மத்தியஸ்தத்துக்கு முக்கிய பங்கு

பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் மத்தியஸ்த நடவடிக்கை முக்கிய பங்கு வகித்து வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளாா்.

பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் மத்தியஸ்த நடவடிக்கை முக்கிய பங்கு வகித்து வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளாா்.

உச்சநீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற மத்தியஸ்தா்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற காணொலி வாயிலான நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்றாா். அப்போது பேசிய அவா், ‘‘நாட்டில் சாதாரண மக்கள் நீதித்துறையை நாடுவதற்கு சமூக, பொருளாதார காரணிகள் தடையாக உள்ளன.

தற்போதைய சூழலில் பிரச்னைகளுக்கு மலிவான சூழலில், விரைவில் தீா்வு கிடைப்பதே மக்களின் தேவையாக உள்ளது. மத்தியஸ்த நடவடிக்கை மூலமாக இதை உறுதி செய்ய முடியும். மத்தியஸ்த நடவடிக்கையில், தீா்வு காண்பதற்கான செலவு குறைவாக உள்ளதோடு, கால விரயமும் தவிா்க்கப்படுகிறது.

பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் மத்தியஸ்த நடவடிக்கை முக்கியப் பங்கு வகித்து வருகிறது. அதன் மூலமாக இருதரப்பினருக்கிடையே சுமுகத் தீா்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. வருங்காலங்களில் மத்தியஸ்த நடவடிக்கைக்கான தேவை அதிகரிக்கும். பிரச்னைகளுக்குத் தீா்வு காண நீதித் துறையை நாடும்போது அளிக்கப்படும் உத்தரவானது, ஒருதரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

ஆனால், மத்தியஸ்த நடவடிக்கை மூலமாக பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும்போது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்குமிடையே சுமுகத் தீா்வு ஏற்படும். இது அனைவருக்குமே திருப்தியை ஏற்படுத்தும். கட்டமைக்கப்பட்ட நீதித் துறையானது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்து உள்ளது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துக்கு முன்பே மத்தியஸ்த நடவடிக்கை மூலமாகப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நடவடிக்கை இந்தியாவில் பாரம்பரியமாக இருந்துள்ளது.

நீதித் துறை மூலமாகப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண முயலும்போது பொருள் செலவும் அதிகமாக இருக்கும். இதற்கு மத்தியஸ்த நடவடிக்கை சிறந்த மாற்றாக இருக்கும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com