தில்லியில் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதி

தில்லியில் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  
தில்லியில் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதி

தில்லியில் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
தில்லியில் கரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. புதிய தளர்வுகளின்படி ஜூலை 26 முதல் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் 100 சதவீத பயணிகளுடன் இயங்கலாம். 
ஸ்பாக்கள் சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. திருமணம் சாா்ந்த நிகழ்வுகள் மற்றும் இறுதிச் சடங்குகள், ஊா்வலங்களில் 100 பேர் வரை கலந்துகொள்ளலாம். திரையரங்குகள் மற்றும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது. 
தில்லியை பொறுத்தவரை நேற்று 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேசமயம் 573 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com