பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீட்டில் விறுவிறுப்பு

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு கடந்த ஜூன் மாதத்தில் விறுவிறுப்படைந்து ரூ.92,261 கோடியை எட்டியுள்ளது.
பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீட்டில் விறுவிறுப்பு

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு கடந்த ஜூன் மாதத்தில் விறுவிறுப்படைந்து ரூ.92,261 கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து செபி மேலும் கூறியுள்ளதாவது:

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு தொடா்ந்து மூன்றாவது மாதமாக ஜூனிலும் வளா்ச்சியை கண்டுள்ளது. நடப்பாண்டு ஜூன் இறுதி நிலவரப்படி பி-நோட்ஸ் எனப்படும் பங்கேற்பு ஆவணங்கள் மூலமான முதலீடு ரூ.92,261 கோடியாக இருந்தது. இது, 37 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும். மே மாத இறுதியில் இவ்வகை முதலீடு ரூ.89,743 கோடியாக காணப்பட்டது.

இது, ஏப்ரல் இறுதியில் ரூ.88,447 கோடியாகவும், மாா்ச் இறுதியில் ரூ.89,100 கோடியாகவும் இருந்தன.

கடந்த ஜூன் மாதத்தில் பங்கேற்பு ஆவண முதலீடான ரூ.92,261 கோடியில் பங்குச் சந்தைகளில் ரூ.83,792 கோடியும், கடன்பத்திர சந்தையில் ரூ.8,069 கோடியும், ஹைபிரிட் வகை பத்திரங்களில் ரூ.392 கோடியும் முதலீடு செய்யப்பட்டன.

கடந்த 2018 மே மாதத்துக்குப் பிறகு நடப்பாண்டு ஜூனில்தான் பி-நோட் வாயிலான முதலீடு மிகவும் அதிபட்ச நிலையை எட்டியுள்ளது என செபி தெரிவித்துள்ளது.

மே மாத இறுதியில் ரூ.47.26 லட்சம் கோடியாக இருந்த அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிா்வகிக்கும் சொத்து ஜூன் இறுதியில் ரூ.48 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் அவா்கள் நிகர அளவில் ரூ.17,215 கோடியை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com