அடுத்த கர்நாடக முதல்வர் யார்? இன்று மாலைக்குள் விடை: எடியூரப்பா

கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழலில் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்விக்கு கட்சி தலைமை இன்று மாலைக்குள் பதில் அளிக்கும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்நாடகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்விக்கு கட்சித் தலைமை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் பதில் அளிக்கும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட பின்பு, மதியம் இரண்டு மணிக்கு பெலகாவி நகருக்கு எடியூரப்பா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், அவர் பெங்களூருவுக்கு செல்கிறார்.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

"கட்சி மேலிடத்திலிருந்து இன்று மாலைக்குள் செய்தி வரும். உங்களுக்கும் அந்த செய்தி குறித்து தெரியவரும். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராக அறிவிக்கப்படுவாரா என்பதெல்லாம் கட்சி மேலிடம் எடுக்க வேண்டிய முடிவு. இதுகுறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைமைக்கே உள்ளது" என்றார்.

புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது குறித்து சனிக்கிழமை வரை பாஜக மேலிடம் தெளிவான பதில் அளிக்கவில்லை.

எனினும், நான்காவது முறையாக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறவுள்ள நிலையில், அவரின் பதவி பறிக்கப்படும் என செய்திகள் வெளியாகின.

கட்சியில் ஒரு பிரிவு, இப்போதைக்கு மாநில தலைமையில் மாற்றம் இருக்காது என தெரிவித்தது. ஆனால், மற்றொரு பிரிவு இதுகுறித்து முடிவு இன்று வெளியாகும் என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com