நாட்டின் மனதின் குரலை புரிந்துகொண்டிருந்தால் தடுப்பூசி நிலை மோசமாக இருந்திருக்காது: ராகுல்

‘நாட்டின் மனதின் குரலை உண்மையில் புரிந்துகொண்டிருந்தால், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் நிலை இப்போதுள்ளதுபோல இருந்திருக்காது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘நாட்டின் மனதின் குரலை உண்மையில் புரிந்துகொண்டிருந்தால், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் நிலை இப்போதுள்ளதுபோல இருந்திருக்காது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

தனது சுட்டுரைப் பக்க பதிவில் ராகுல் காந்தி இந்த விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.

‘தடுப்பூசி எங்கே’ என்ற ஹேஷ்டேகுடன் ராகுல் வெளியிட்டிருக்கும் அந்தப் பதிவில், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் மிக மெதுவாக நடைமுறைப்படுத்துவது குறித்த ஊடக செய்திகள் அடங்கிய காணொலியையும் அவா் இணைத்துள்ளாா்.

அதில், கரோனா மூன்றாம் அலை பாதிப்பை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்தவும், வரும் டிசம்பா் மாதத்துக்குள் நாட்டின் மக்கள்தொகையில் 60 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தவும் மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

அந்த இலக்கை எட்ட, நாள் ஒன்றுக்கு 93 லட்சம் தடுப்பூசிகள் என்ற விகிதத்தில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 7 தினங்களில் நாள் ஒன்றுக்கு 36 லட்சம் தடுப்பூசிகள் என்ற விகிதத்திலேயே செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தினசரி தடுப்பூசிகளின் பற்றாக்குறை 56 லட்சமாக உள்ளது.

இதனுடன் ராகுல் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘ நாட்டின் மனதின் குரலை உண்மையில் புரிந்துகொண்டிருந்தால், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் நிலை இப்போதுள்ளது போல இருந்திருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com