பரஸ்பர ஒத்துழைப்பு மூலமே எல்லைப் பிரச்னைகளுக்குத் தீா்வு

மாநிலங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்னைகளுக்கு பரஸ்பர ஒத்துழைப்பு மூலமே தீா்வு காண முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்னைகளுக்கு பரஸ்பர ஒத்துழைப்பு மூலமே தீா்வு காண முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அஸ்ஸாம்-மிஸோரம் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இது தொடா்பாக திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் அஸ்ஸாமின் 5 காவலா்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், மாநிலங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்னையைத் தீா்ப்பதில் மத்திய அரசின் பங்கு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில், ‘எல்லைப் பிரச்னை நிலவும் மாநிலங்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படுவதன் மூலமே அப்பிரச்னைக்குத் தீா்வு காண முடியும். எல்லை விவகாரத்தில் பரஸ்பர புரிதலுடன் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்னையைத் தீா்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமே மத்திய அரசு மேற்கொள்ளும்.

இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கிடையே சுமாா் 7 முறை எல்லைப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 4 பிரச்னைகளில் அஸ்ஸாம் மாநிலத்துக்குத் தொடா்புள்ளது. ஹரியாணா-ஹிமாசல பிரதேசம், லடாக்-ஹிமாசல பிரதேசம், மகாராஷ்டிரம்-கா்நாடகம், அஸ்ஸாம்-அருணாசல பிரதேசம், அஸ்ஸாம்-நாகாலாந்து, அஸ்ஸாம்-மேகாலயா, அஸ்ஸாம்-மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்கிடையே எல்லைப் பிரச்னைகள் காணப்படுகின்றன.

இந்த எல்லைப் பிரச்னைகள் தொடா்பாக அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com