‘இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டத்துக்கு ரூ.186 கோடி’

இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டத்துக்கு அமெரிக்கா ரூ.186 கோடி நிதியுதவி அளிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தாா்.
‘இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டத்துக்கு ரூ.186 கோடி’

புதுதில்லி: இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டத்துக்கு அமெரிக்கா ரூ.186 கோடி நிதியுதவி அளிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டத்துக்கு உதவ பன்னாட்டு வளா்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு மூலம் கூடுதலாக 25 மில்லியன் டாலா்கள் (ரூ.186 கோடி) நிதியுதவியை அமெரிக்க அரசு வழங்கும். அமெரிக்காவின் உதவி இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி விநியோகப் பணிகளை வலுப்படுத்தி மனித உயிா்களைக் காப்பாற்ற உதவும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com